அடிப்படை ஆராய்ச்சியை வலுப்படுத்த வேண்டும்:ஷிச்சின்பிங்

Estimated read time 0 min read

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏப்ரல் 30ஆம் நாள் முற்பகல், ஷாங்காய் மாநகரில், அடிப்படை ஆராய்ச்சியை வலுப்படுத்துவது குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார்.

இக்கூட்டத்தில் சீன அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சர், சீனக் கல்வி அமைச்சர், சீன அறிவியல் கழகத்தின் தலைவர், ஷாங்காய் நகராட்சிக் கட்சிக் குழுச் செயலாளர், தொடர்புடைய துறைகளின் நிபுணர்கள், அறிஞர்கள் முதலியோர் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டனர்.

அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில்,

தற்போது, புதிய சுற்று அறிவியல் தொழில் நுட்பப் புரட்சி மற்றும் தொழில் துறையின் சீர்திருத்தம் வெகுவாக முன்னேற்றமடைந்துள்ளது. உலகளவிலான அறிவியல் தொழில் நுட்பப் போட்டியில் அடிப்படை ஆராய்ச்சி சார்ந்த முன்னணிப் பிரிவுகளுக்கு மேலதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்நிலையில் அடிப்படை அறிவியல் துறைகளுக்கான கட்டுமானத்தை வலுப்படுத்தி, அதனையும் செயல்பாட்டு அறிவியல் துறைகளையும் இசைவாக வளர்ப்பதை விரைவுபடுத்த வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

கல்வி மற்றும் அறிவியல் தொழில் நுட்பத் துறை சார்ந்த திறமைசாலியை மேலும் ஆழமாக்கி, அடிப்படை ஆராய்ச்சிக்கான உத்தரவாதத்தை அதிகரித்து, உலகளவிலான அறிவியல் தொழில் நுட்ப ஆளுமையில் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுக்க வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.

You May Also Like

More From Author