நாடு முழுதும் 24 தேசிய சட்டப் பல்கலைகள் இயங்கி வரு கின்றன. இதில், சட்டம் பயில, ‘கிளாட்’ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம்.
இந்த சூழல்ல, தேசிய சட்டப்பல்கலை கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம், கடந்த 18ம் தேதி நடந்தது. இதில், 2027ம் கல்வியாண்டுக்கான கிளாட் நுழைவுத் தேர்வு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
அதன்படி, 2027ம் ஆண்டுக்கான ‘கிளாட்’ நுழைவுத் தேர்வு, வரும் டிசம்பர் 6ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, வரும் ஆகஸ்டு, 3ம் தேதி முதல், அக்டோபர் 31ம் தேதி வரை நடக்கும் என, தேசிய சட்டப் பள்ளி அறிவித்து உள்ளது.
