அரசு கஜானாவை ஏடிஎம் இயந்திரம் போல் ஸ்டாலின் குடும்பம் பயன்படுத்துவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவள்ளுவர், காமராஜர் வாழ்ந்த மண்ணான தமிழ்நாடு ஸ்டாலின் குடும்பத்தின் ஏ.டி.எம். போன்று இயங்குகிறது
தமிழ்நாட்டு மக்கள் அவதிப்படுகிறார்கள். திவால் நிலையை நோக்கி தமிழ்நாடு செல்வதாகவும் அவர் கூறினார். நாட்டிலேயே மிகவும் பொறுப்பற்ற அரசாக திமுக அரசு விளங்குகிறது என்றும், டாஸ்மாக் ஊழல் உள்ளிட்டவற்றுக்கு ஸ்டாலின் குடும்பமே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்டாலின் குடும்பத்தினரின் ஊழல் காரணமாக 5 லட்சம் பேர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
