செங்து அறிக்கையை ஏற்றுக்கொண்ட ஏபெக் எண்ணியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு அமைச்சர்கள் கூட்டம்

Estimated read time 0 min read

2026ஆம் ஆண்டு ஆசிய பசிபிக் பொருளாதார மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் எண்ணியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு அமைச்சர்கள் கூட்டம் 23ஆம் நாள் செங்து மாநகரில் நடைபெற்றது.

இதில், செங்து அறிக்கை எனப்படும் 2026ஆம் ஆண்டு ஏபெக் எண்ணியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு அமைச்சர்கள் அறிக்கை  ஏற்றுக்கொள்ளப்பட்டது. எண்ணியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்களின் மூலம் ஆசிய பசிபிக் பொதுச் சமூகத்துக்கு ஆற்றலை வழங்குவதை முன்னேற்ற இக்கூட்டத்தில் ஒருமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. அடுத்த குறிப்பிட்ட காலத்தில், ஏபெக் எண்ணியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறையிலான ஒத்துழைப்புக்குரிய செயல் கோட்பாட்டையும் இது உருவாக்கியுள்ளது.

இதுபற்றி இக்கூட்டத்தின் தலைவரும், தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சருமான லி லெசெங் கூறுகையில், ஏபெக் அமைப்பு முறையின் பங்கைச் சீனா தொடர்ந்து முன்னேற்றி, பல்வேறு நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இக்கூட்டத்தில் எட்டப்பட்டுள்ள பொதுக் கருத்தை நனவாக்கும் என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author