மேற்கு வங்க முதல்கட்ட வாக்குப்பதிவு – 91.78 சதவீத வாக்குகள் பதிவு!

Estimated read time 0 min read

மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 91.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்குவங்க மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே கடும் போட்டி நிலவுகிறது. முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்த முதற்கட்ட தேர்தலில் 91.78 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்குவங்கத்தில், இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு வருகிற 29ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழகம், மேற்குவங்கம் உட்பட 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் வரும் மே 4ம் தேதி எண்ணப்படுகின்றன.

You May Also Like

More From Author