தன்னலமின்றி மக்கள் ஒப்படைக்கும் பொறுப்பை ஒருபோதும் மறக்காமல் பாடுபடும்:ஷிச்சின்பிங்

Estimated read time 0 min read

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங், 2016ம் ஆண்டின் ஜுலை முதல் நாளில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 95வது ஆண்டு நிறைவு கூட்டத்தில், கட்சி உறுப்பினர்கள், மக்களின் மீது எப்போதும் தூய்மையான மனம் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். இதுவும், தனது பணிப் பயணத்தில் அவர் கடைப்பிடித்ததைப் பிரதிபலிக்கிறது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டுக்குப் பிறகு, அவர் மிகவும் ஏழையான 14 பகுதிகளில் 50 முறைகளாக வறுமை ஒழிப்புக்கான ஆய்வு பயணம் மேற்கொண்டார். கிராம மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்கா விட்டால், நான் ஒரு நாளும் மனம் அமைதியாக இருக்க மாட்டேன் என்று ஷிச்சின்பிங் அடிக்கடி கூறினார்.

தற்போது சீனாவில் சுமார் 10 கோடி மக்கள், வறுமையிலிருந்து விடுபட்டுள்ளதோடு, ஓரளவு செழுமையடைந்த சமூகமும் முழுமையாக கட்டமைக்கப்பட்டுள்ளது. உலக்களவில் மிக பெரிய கல்வி, சமூகக் காப்புறுதி, மருத்துவச் சுகாதாரம் மற்றும் நகர உறைவிடக் காப்புறுதி முறைமை உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் வாழ்க்கை குறிப்பிட்டளவில் மேம்பட்டுள்ளது.

நடைமுறையில் பொறுப்பை ஏற்று, மக்களுக்கு நலன் தருவது, ஷிச்சின்பிங்கின் அரசியல் ஆட்சி முறையின் தெளிவான அடிப்படையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author