2025ம் ஆண்டு 12ஆவது உலக விளையாட்டுப் போட்டி ஆகஸ்ட் 7ம் நாள் சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் தலைநகர் செங் டுவில் துவங்கியது.
சீன அரசவை உறுப்பினர் ஷேன் யீ ட்சின் இத்துவக்க விழாவில் கலந்து கொண்டு போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார். இப்போட்டியில் 116 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த போட்டி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
உலக விளையாட்டுப் போட்டி, 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச உலக விளையாட்டுப் போட்டி சங்கத்தால் நடத்தப்படுகின்றது. நடப்பு போட்டியில் 34 முக்கிய விளையாட்டுப் பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெறும். சுமார் 4 ஆயிரம் வீரர்கள் இவற்றில் பங்கெடுக்கப் பதிவு செய்துள்ளனர். சீன விளையாட்டுப் பிரதிநிதி குழுவின் 321 வீரர்கள், 28 முக்கியப் பிரிவுகளின் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.
படம்: VCG