சீன சுத்திகரிப்பு நிறுவனம் மற்றும் 40 கப்பல்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை  

Estimated read time 1 min read

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் மோதல்களுக்கு மத்தியில், ஈரானின் எண்ணெய் வர்த்தகத்தை முடக்கும் நோக்கில் அமெரிக்கா மீண்டும் ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஈரானிடமிருந்து சட்டவிரோதமாக கச்சா எண்ணெயை கொள்முதல் செய்வதாகவும், அதனை உலக சந்தையில் விநியோகிப்பதாகவும் குற்றம் சாட்டி, சீனாவின் முன்னணி சுத்திகரிப்பு நிறுவனமான ‘ஹெங்லி பெட்ரோகெமிக்கல்’ மற்றும் சுமார் 40 கப்பல் நிறுவனங்கள் மீது அமெரிக்க அரசு கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இந்த நடவடிக்கை, வரும் மே மாதம் அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் முக்கியப் பயணத்திற்குச் சில வாரங்களுக்கு முன்பாக எடுக்கப்பட்டுள்ளது.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

You May Also Like

More From Author