தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு சில படைப்புகள், சிந்தனை மற்றும் சமூக உணர்வுகள் மட்டுமல்லாமல், தமிழ்மொழியின் ஆழத்தையும், அதனை நேசிக்கும் எழுத்தாளரின் ஆன்மாவையும் வெளிப்படுத்துகின்றன.
அவற்றில் குறிப்பிடத்தக்கதாக விளங்கும் நூல் ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய ‘தமிழ் இன்பம்’ என்ற நூலாகும்.
இந்நூல் தமிழ்மொழியின் மீது ஆசிரியர் வைத்துள்ள அளவற்ற பற்று, அதன் பெருமை குறித்து அவருடைய ஆழ்ந்த சிந்தனை மற்றும் பண்பாட்டோடு இணைந்த மொழியின் அழகு ஆகியவற்றை (Tamil Inbam Book Review) வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் அரிய படைப்பு.
இந்த தமிழ் இன்பம் புத்தகத்தினை படிக்கும் அனைவரும் தமிழின் இனிமை, வளம் மற்றும் தனித்துவம் ஆகியவை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஆசிரியர் அறிமுகம்
ரா.பி.சேதுப்பிள்ளை தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக திகழ்கிறார். அவர் தமிழின் இலக்கிய செல்வங்களை ஆராய்ந்து, வாசகர்களுக்கு எளிமையாக புரியும் வகையில் தமிழ் இலக்கியம், வரலாறு, பண்பாடு, சமூகம் என தனித்துவமான பாணியில், தெளிவான கருத்துக்களுடன் தனது சிந்தனையை வெளிப்படுத்தியவர்.
இவரின் எழுத்துகளில் எப்போதும் இரண்டு முக்கிய அம்சங்கள் வெளிப்படும் ஒன்று தமிழ்மொழி மீது அவரின் அன்பு மற்றொன்று சமூக நலனுக்கான ஆழ்ந்த விழிப்புணர்வு.
நூலின் கருப்பொருள் (Tamil Inbam Book Review)
தமிழ் இன்பம் நூலில் நம் தமிழ்மொழி எப்படி மனிதர்களின் அன்றாட வாழ்க்கையோடு கலந்து, அது எப்படி மனிதர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது, எவ்வாறு பண்பாட்டு அடையாளமாக திகழ்கிறது என்பதை விரிவாக விளக்குகிறது.
மேலும் இந்நூலில் தமிழ்மொழியின் ஒலி இனிமை, இலக்கிய ஆழம், பண்பாட்டு மரபு ஆகியவற்றின் மூலம் தமிழின் வளத்தை ஆசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை சித்தரித்துள்ளார்
இலக்கியச் செல்வம்
தமிழ் இன்பம் நூலில் ஆசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை சங்க இலக்கியமான சிலப்பதிகாரம், மணிமேகலை முதல் பிற்காலப் சங்கப் பாட்டு படைப்புகளின் மூலம் தமிழ் இலக்கியப் பெருமையை விரிவாக எடுத்துரைக்கிறார்.
மேலும் தமிழ்மொழி என்பது ஒரு பண்பாட்டு அடையாளம் (Tamil Inbam Book Review) என்றும், தமிழனை உலகம் அறியும் சாளரம் என்றும் ஆசிரியர் வலியுறுத்துகிறார்.
மேலும் தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கை முறைகள், பழக்கவழக்கங்கள், அவர்களின் கலை வடிவங்கள் என அனைத்தும் இந்த மொழியோடு இணைந்துள்ளன என்பதையும் எடுத்துக்காட்டுகிறார்.
வாசகர்களின் அனுபவம்
ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய இந்த ‘தமிழ் இன்பம்’ நூலை வாசகர்கள் வாசிக்கும் போது இரண்டு விதமான அனுபவங்களை பெறுகிறார்கள். ஒன்று உணர்ச்சி அனுபவமான ‘தமிழின் இனிமை’ மற்றும் ‘அழகு’ வாசகர்களை கவர்கிறது.
மற்றொன்று அறிவியல் அனுபவமான வரலாறு, சமூக சிந்தனை, இலக்கியம் ஆகியவை வாசகர்களின் அறிவை விரிவாக்குகின்றன.
**********
நூல்: தமிழ் இன்பம்
ஆசிரியர்: ரா.பி.சேதுப்பிள்ளை
பூம்புகார் பதிப்பகம்
பக்கங்கள்: 208
விலை: ரூ.86/-
The post தமிழின் இனிமையை எடுத்துரைக்கும் நூல்! appeared first on Thaaii Magazine.
