தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், வாக்குப்பதிவு நேரத்தை மாலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கியக் கோரிக்கையைத் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி டெல்லியில் உள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாக்குப்பதிவு நீட்டிக்கப்படுமா? இரவு 8 மணி வரை நேரம் நீட்டிக்க தவெக கோரிக்கை
