வாஷிங்டனில் பதற்றம்: வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் துப்பாக்கிச் சூடு!

Estimated read time 1 min read

வாஷிங்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் இரவு நடைபெற்ற வருடாந்திர வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்கள் சங்க விருந்து நிகழ்ச்சியில் (WHCD), திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிபர் டொனால்ட் டிரம்ப் மேடையில் இருந்தபோது, அடுத்தடுத்து பலத்த வெடிச் சத்தம் கேட்டதை அடுத்து, ரகசிய சேவை (Secret Service) அதிகாரிகள் உடனடியாக அவரை பாதுகாப்பாக வெளியேற்றினர். அங்கிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் விருந்தினர்கள் அச்சத்தில் மேஜைகளுக்கு அடியில் தஞ்சமடைந்த நிலையில், துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படையினர் ஹோட்டல் வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், பாதுகாப்புப் படையினரின் துரித நடவடிக்கையைப் பாராட்டியதுடன், தான் நலமுடன் இருப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்

Please follow and like us:

You May Also Like

More From Author