சர்வதேச தாய்ச்சிசுவான் தினத்தைக் கொண்டாடும் விளம்பரப் பிரச்சாரம் இலங்கையில் நடைபெற்றது

சர்வதேச தாய்ச்சிசுவான் தினத்தைக் கொண்டாடும் விளம்பரப் பிரச்சாரம் ஒன்று இலங்கையின் கொழும்பில் சனிக்கிழமையன்று நடைபெற்றது.

“எல்லாம் இணக்கத்துடன் – தாய்ச்சி ஊக்குவிப்பு நிகழ்வு” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இலங்கைக்கான சீனத் தூதர் ச்சி ச்சென்ஹோங் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.அப்போது அவர் கூறுகையில்,இலங்கை மக்களுக்கு தாய்ச்சி பயிற்சி அளிக்கும் பொருட்டு, லும்பினி கன்பூசியஸ் வகுப்பறையானது சீனப் பண்பாட்டு வகுப்பறையில் தாய்ச்சி வகுப்புகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் என்றார்.அதே வேளையில்,உள்ளூர் சீன மொழி ஆசிரியர்களுக்கான பண்பாட்டுப் பயிற்சி முகாமில், சீன தாய்ச்சி பண்பாடு குறித்த அவர்களின் புரிதலை மேம்படுத்தும் வகையில் தாய்ச்சி வகுப்புகளும் இணைக்கப்படும் என்றார்.

 

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே கூறுகையில், விளையாட்டுகளுக்குப் பண்பாடுகளை இணைக்கவும், நட்பை வலுப்படுத்தவும், எல்லைகளைக் கடந்து ஒற்றுமையை ஊக்குவிக்கவும் சக்தி உள்ளது என்றார். இலங்கை மற்றும் சீன மக்களிடையே ஒரு வலுவான பிணைப்பை உருவாக்குவதில் தாய்ச்சி தொடர்ந்து பண்பாட்டுப் பங்கை வகிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோ அமைப்பு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5 நாளன்று உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 43வது யுனெஸ்கோ பொது மாநாட்டு அமர்வில், மார்ச் 21 ஆம் தேதியை வருடாந்திர சர்வதேச தாய்ச்சிசுவான் தினமாக அறிவித்தது. ஐ.நா. ஒரு தற்காப்புக் கலையின் பெயரில் சர்வதேச தினத்தை அங்கீகரிப்பது இதுவே முதல் முறையாகும்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author