ரஷிய-சீன-இந்திய ஒத்துழைப்பு அமைப்பு முறையை மீட்டெடுப்பது குறித்து ரஷியா சீனாவுடனும் இந்தியாவுடனும் பேச்சுவார்த்தை மேற்கொள்கின்றது என்று ரஷிய துணை வெளியுறவு அமைச்சர் லுதன்கோ தெரிவித்தார்.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின் ஜியன் 17ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்,
சீன-ரஷிய-இந்திய ஒத்துழைப்பு, மூன்று நாடுகளின் நலனுக்கு பொருந்தியது மட்டுமல்ல, பிரதேச மற்றும் உலகத்தின் அமைதி, பாதுகாப்பு, நிதானம், முன்னேற்றம் ஆகியவற்றுக்கு துணை புரியும். மூன்று நாடுகளின் ஒத்துழைப்பை முன்னேற்றுவது குறித்து ரஷியாவுடனும் இந்தியாவுடனும் தொடர்பு கொள்ள சீனா விரும்புகின்றது என்றார்.