இரண்டு நாட்கள் பயணமாக சிக்கிம் சென்றுள்ள பிரதமர் மோடி 4 ஆயிரத்து 18 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தை முடித்த பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக சிக்கிம் மாநிலத்திற்கு சென்றுள்ளார். தொடர்ந்து காங்டாக் பகுதியில் உள்ள ஸ்வர்ணஜெயந்தி மைத்ரி மஞ்சரி பூங்காவை பிரதமர் பார்வையிட்டார். இங்கு ஆர்கிட் மலர்கள் வளர்க்கப்படும் உலகத்தரம் வாய்ந்த ஆர்கிட் பூங்காவாக ஸ்வர்ணஜெயந்தி மைத்ரி மஞ்சரி பூங்கா உருவெடுத்துள்ளது. இங்கு வைக்கப்பட்டுள்ள மலர்கள் மற்றும் சிலைகளை பிரதமர் மோடி கண்டுகளித்தார்.
தொடர்ந்து சிக்கிம் மாநிலம் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாக அங்கு நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இதில் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய நடனங்கள் அரங்கேற்றப்பட்டன. இதனை பிரதமர் மோடி ஆர்வத்துடன் கண்டுகளித்தார்.
பின்னர் விழா மேடையில் 4 ஆயிரத்து 18 கோடி ரூபாய் மதிப்புள்ள மாநிலத்திற்கான வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்தூர் மற்றும் முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
