251217சீன வரலாற்றின் முன்னேற்ற போக்கில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தினம், டிசம்பர் 18ஆம் நாளாகும். 47 ஆண்டுகளுக்கு முன்பு, சீன கம்யூனிஸ்ட் கட்சி 11ஆவது தேசிய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வில், சீர்திருத்தம் மற்றும் திறப்பு பணியை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 47 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று, ஹெய்நான் தாராள வர்த்தக துறைமுகம் இயங்க துவங்கியது. சீனாவின் உயர் நிலை திறப்பு பணி புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது. சீர்திருத்தம் மற்றும் திறப்பு பணி அதாவது சீனாவின் 2ஆவது முறை புரிட்சி, சீனாவுக்கும் உலகிற்கும் செல்வாக்கு ஏற்படுத்தி வருகின்றது.
சீன ஊடகக் குழுமத்தின் சி ஜி டி யன் நிறுவனம், உலக இணைய பயன்படுத்துபவர்களுக்கு கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. ஹெய்நான் தாராள வர்த்தக மண்டலத்தின் கட்டுமானம், சீனா, உயர் நிலை திறப்பு பணியையும் திறப்புதன்மை வாய்ந்த உலக பொருளாதாரத்தையும் முன்னேற்றும் சின்னமான நடவடிக்கையாகும் என்று 92.2 விழுக்காட்டினர்கள் கருத்து தெரிவித்தனர். ஹெய்நான் தாராள வர்த்தக துறைமுகம், சீனாவின் புதிய சுற்று திறப்பு பணியின் முக்கிய நுழைவாயிலாக மாறும் என்று 93 விழுக்காட்டினர்கள் கருத்து தெரிவித்தனர்.
