ஜனவரி 23ஆம் நாள் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், உகாண்டா அரசுத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட முசேவெனிக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.
அதில் அவர் கூறுகையில்,
சீனாவும் உகாண்டாவும் பாரம்பரிய நட்புறவைக் கொண்ட நாடுகள். கடந்த சில ஆண்டுகளில் முக்கிய நலன்கள் மற்றும் அக்கறைக்கொண்ட பிரச்சினைகள் குறித்து இருதரப்பும் ஒன்றுக்கு ஒன்று ஆதரவு அளித்து வருகின்றன. பல்வேறு துறைகளின் நடைமுறை ஒத்துழைப்புகள் அதிக சாதனைகளைப் பெற்றுள்ளன. சீனாவின் நண்பராக, முசேவெனி, இரு நாட்டுறவு வளர்ச்சியை முன்னேற்றி வருகின்றார். இரு நாட்டுறவு வளர்ச்சியில் நான் பெரும் கவனம் செலுத்துகிறேன். முசேவெனியுடன் இணைந்து, அரசியல் நம்பிக்கையை ஆழமாக்கி, பாரம்பரிய நட்பைத் தொடர்த்து, சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சி மாநாட்டின் சாதனைகளை நடைமுறைப்படுத்தி, சீன-உகாண்டா பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவு வளர்ச்சியை ஆழமாக்கி, இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நன்மை புரிய விரும்புகிறேன் என்றார்.
