சேவைத் தொழிலின் திறன் மற்றும் தர உயர்வுக்கு சீனா திட்டம்

Estimated read time 0 min read

சீன அரசவையின் தகவல் பணியகம் ஏப்ரல் 28ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், சேவைத் தொழிலின் திறன் விரிவாக்கம் மற்றும் தர உயர்வை மேம்படுத்துவதற்கான கருத்துக்கள் என்ற ஆவணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட இந்த ஆவணத்தில், 2030ஆம் ஆண்டுக்குள் சீனச் சேவைத் தொழிலின் மொத்த அளவு 100 டிரில்லியன் யுவானை எட்ட வேண்டும் என்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், சேவைத் தொழிலின் திறன் விரிவாக்கம் மற்றும் தர உயர்வுக்கு 10 முக்கிய துறைகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணைத் தலைவர் ஷென் சூலின் தெரிவித்தார்.

தொழில்நுட்ப சேவை, நவீன சரக்குப் போக்குவரத்து, மென்பொருள் மற்றும் தகவல் சேவை, விநியோக சங்கிலி நிதி, ஆற்றல் சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சேவை, வணிகச் சேவை ஆகிய 6 துறைகளில் ஆய்வு மற்றும் வடிவமைப்பின் நிபுணத்துவம், உற்பத்தி நடைமுறையில் மதிப்பு உயர்வு, சந்தை மதிப்பு நனவாக்கம் ஆகியவை மேம்படுத்தப்படும். குடிமக்களுக்கான சேவை, முதியோர் மற்றும் குழந்தை பராமரிப்பு, உடல்நலச் சேவை, கலாசார, சுற்றுலா மற்றும் விளையாட்டு சேவை ஆகிய 4 துறைகளில், அடிப்படை தேவைக்கான சேவைகளின் அணுகல் மற்றும் தரம் மேலும் மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author