அமெரிக்கா-ஈரான் இடையே உடன்படிக்கை ஒன்று எட்டப்பட உள்ளது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மாவ் நிங் 25ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கேள்விக்கு பதிலளிக்கையில், பேச்சுவார்த்தையே சரியான வழியாகும் என்றும், ஆயுதப்பலத்துடன் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்றும் சீனா எப்போதுமே கருதுவதாக தெரிவித்தார். அமெரிக்கா-ஈரான் இடையே தொடங்கியுள்ள பேச்சுவார்த்தை மீண்டும் நிறுத்தப்படக்கூடாது. இருதரப்பும் பதற்றத்தைத் தணிப்பதற்கான நிலையை வலுப்படுத்தவும், அரசியல் ரீதியான தீர்வுக்கான திசையை பின்பற்றவும், பேச்சுவார்த்தையின் மூலம் அனைத்து தரப்புகளும் கொண்டுள்ள அக்கறைகளை பூர்த்தி செய்யும் தீர்வை எட்டவும் வேண்டும். மேலும், கப்பல் போக்குவரத்து வழித்தடங்களை விரைவில் திறக்கவும், சர்வதேசச் சமூகத்தின் கோரிக்கைகளுக்கு மறுமொழி அளிக்கவும், உலகளாவிய உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியின் நிலைத்தன்மையையும் சீரான செயல்பாட்டையும் பராமரிக்கவும், பன்முக மற்றும் நிரந்தர போர்நிறுத்தத்தின் ஒப்பந்தத்தை எட்டவும், மத்திய கிழக்கு மற்றும் வளைகுடாப் பிரதேசத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் விரைவில் மீட்டெடுப்பதை ஊக்குவிக்கவும் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா-ஈரான் இடையே தொடங்கியுள்ள பேச்சுவார்த்தை நிறுத்தப்படக்கூடாது
You May Also Like
More From Author
இன்றைய (ஜூலை 3) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
July 3, 2025
தமிழக மக்கள் ஊழல் கட்சிகளைப் புறக்கணிக்க வேண்டும்! – அண்ணாமலை
February 1, 2024
