2026ஆம் ஆண்டு பெய்ஜிங் சர்வதேச வாகனக் கண்காட்சி சமீபத்தில் பெய்ஜிங் மாநகரில் துவங்கியது. அறிவியல் தொழில் நுட்பம் மிகுந்த பல்வகை வாகனங்கள் இதில் திரண்டு காட்சிக்கு வைக்கப்பட்டன. 5 நிமிடம் சார்ஜ் செய்யப்பட்ட பிறகு கூடுதல் 400 கிலோமீட்டர் ஓடும் வானகங்கள், தடைகளை எதிர்நோக்கும் போது தானாகவே வேகத்தை குறைக்க கூடிய வாகனங்கள் முதலியவை வாகனங்கள் மீதான மக்களின் கற்பனை தொடர்ந்து விரிவாக்கப்பட்டுள்ளன.
இவ்வாண்டில், 21 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து 2000க்கும் மேலான வினியோகச் சங்கிலி மற்றும் அறிவியல் தொழில் நுட்ப நிறுவனங்கள் இக்கண்காட்சியில் கலந்துகொண்டன. 1451 வாகனங்கள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டன. அவற்றில் 181 வாகனங்கள் முதன்முறையாக பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. 71 கான்செப்ட் கார்கள் இதில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. சீனாவின் வணிகச் சின்னங்களில் வரலாற்றில் முன்கண்டிராத அளவில் 42 முக்கிய தொழில் நுட்பங்கள் இதில் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாண்டு 2 முன்னேறிய தொழில் நுட்பங்கள் அதிகமான கவனத்தை ஈர்த்துள்ளன. முதலில், பவர் மின்கல தொழில் நுட்பம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு, மின்சார வாகனங்களின் பயண நேரம், சார்ஜ் செய்யும் சிக்கல் போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. இரண்டாவதாக, செயற்கை நுண்ணறிவு பெருமளவில் பயன்படுத்தப்படுவதால் வாகனங்களுக்கு “ஸ்மார்ட் மூளை” உள்ளது.
சீனத் தேசிய பயணிகள் கார் சங்கத்தின் தலைமைச் செயலாளர் சுய்யி தோங்சூ கூறுகையில்,
மின்கலம், மின்சார வாகனம் தானியங்கும் அமைப்புமுறை, ஸ்மார்ட் காக்பிட் உள்ளிட்ட தொழில் நுட்பத்தின் முன்னேற்றங்கள் மூலம், உலக வாகனத் தொழில் துறையின் புத்தாக்க ஆதாரமாக சீனா மாறியுள்ளது என்றார்.
வோல்க்சவேகன் வாகன நிறுவனத்தின் பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில்,
சீனாவின் வேகம், வோல்க்சவேகன் வேகத்தை வரையறுத்தி வருகிறது என்றார்.
தென் கொரிய ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், சீனாவில் இருப்பது, சீனாவுக்குத் தயாரிப்பது, உலகத்தை நோக்கி வளர்ப்பது என்ற நெடுநோக்குத் திட்டத்தை இது வகுத்துள்ளது. எதிர்வரும் 5 ஆண்டுகாலத்தில், சீனச் சந்தைக்கு 20 புதிய வகை வாகனங்கள் வினியோகிக்கப்படும். சீனாவின் உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து, நுண்ணறிவான இணைப்பு உள்ளிட்ட புதிய தொழில் நுட்பத்தை ஆராய்ச்சி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
