டிசம்பர் 15ஆம் நாள் வரை இவ்வாண்டு சீனாவின் விமானச் சேவை மூலம் பயணியரின் பயணங்களின் எண்ணிக்கை 70 கோடியைத் தாண்டியுள்ளது.
தினசரி பயணியரின் பயணங்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 18.1 விழுக்காடு அதிகரித்துள்ளது.
சீனாவின் பயணியர் விமானச் சேவை வரலாற்றில் இது புதிய பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.