சி.எம்.ஜி-ரியோ டி ஜெனிரோ நகரின் தலைவர் சந்திப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹைய்சியோங் நவம்பர் 19ஆம் நாள், பிரேசில் ரியோ டி ஜெனிரோ நகரின் மாநகராட்சித் தலைவர் பாயெஸுடன் சந்திப்பு நடத்தினார்.

சீன-பிரேசில் கூட்டு நலன் தரும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளின் நட்புறவை வலுப்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் ஆழமாக விவாதித்தனர்.
ஷென் ஹைய்சியோங் கூறுகையில்,
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் பிரேசில் அரசு தலைவர் லூலா, சீன-பிரேசில் உறவுக்கான நெடுநோக்கு தகுநிலை என்ற அடிப்படையில், ஜி 20 அமைப்பின் 19-ஆவது உச்சிமாநாடு மற்றும் சீன-பிரேசில் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இம்மாநகருடன் மனித பண்பாட்டுப் பரிமாற்றத்தை ஆழமாக்கி, சீன-பிரேசில் நட்புறவைத் தொடர்ந்து தீவிரமாக்க பாடுபட வேண்டும் என்றார்.

You May Also Like

More From Author