செப்டம்பர் 8ஆம் நாள் இணையம் வழி நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த ஆலோசனைகள் உலகளவில் பாராட்டப்பட்டுள்ளன.
தற்போது மேலாதிக்கவாதம், ஒருதரப்புவாதம் மற்றும் பாதுகாப்புவாதம் தலைதூக்கி வரும் நிலைமையில், “பெரிய பிரிக்ஸ் ஒத்துழைப்பை” முன்னேற்றுவது, மனித குலத்தின் பொது எதிர்கால சமூகத்தை கையோடு கைகோர்த்து உருவாக்குவது ஆகியவை குறித்து மூன்று ஆலோசனைகளை ஷிச்சின்பிங் முன்வைத்தார்.
பெய்ஜிங் ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் பிரிக்ஸ் நாட்டு ஒத்துழைப்பு ஆய்வு மையத்தின் தலைவர் வாங் லெய் கூறுகையில், அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த ஆலோசனைகள், உலக நிர்வாக முன்மொழிவை பின்பற்றி செயல்படுத்துவதாகும். பிரிக்ஸ் நாடுகள், ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பலதரப்புவாதத்தைப் பேணிகாப்பதற்கான பொது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளன என்று தெரிவித்தார்.
பலதரப்புவாதம், அமைதி மற்றும் வளர்ச்சியின் முக்கிய ஆதாரமாகும். ஒருதரப்புவாதம் மற்றும் மேலாதிக்கத்தை எதிர்நோக்கி, ஐ.நாவை மையமாக கொண்ட சர்வதேச அமைப்பு முறையையும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கினையும் பேணிகாத்து, தெற்குலக நாடுகளின் பிரதிநிதித்துவத்தையும், கருத்து வெளிப்பாட்டு உரிமையையும் அதிகரித்து, பலதரப்புவாதத்தின் அடிப்படையை வலுப்படுத்த பிரிக்ஸ் நாடுகள் பொறுப்பு ஏற்க வேண்டும்.
உலகில் மிக பெரிய வளரும் நாடாக, சீனா பலதரப்புவாதத்தை உறுதியாக பேணிகாக்கின்றது. மேலும் நியாயமான, நீதியான உலக நிர்வாக முறைமையின் கட்டுமானத்தை விரைவுபடுத்தி, சர்வதேச நியாயம் மற்றும் நீதியைப் பாதுகாக்க புதிய திட்டத்தை ஷிச்சின்பிங் வழங்கியுள்ளார்.
எதிர்காலத்தை எதிர்நோக்கி, பிரிக்ஸ் நாடுகள் ஒன்றுக்கொன்று உதவி செய்து, உலக நிர்வாக முன்மொழிவை கூட்டாக செயல்படுத்தினால், மாறி வரும் சர்வதேச நிலைமையின் அறைகூவல்களைச் சமாளித்து, உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு மேலதிக ஆற்றல்களை உட்புகுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.