தேசிய அளவில் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவது பற்றிய ஷிச்சின்பிங்கின் கட்டுரை வெளியீடு

தேசிய அளவில் வாசிப்பு பழகத்தை மேம்படுத்துவது பற்றி சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் 2013ஆம் ஆண்டு மார்ச் முதல் 2025ஆம் ஆண்டு மார்ச் வரை தெரிவித்த கருத்துகள் தொகுக்கப்பட்டு, ஏப்ரல் 16ஆம் நாள் ஜுயூஷி இதழில் கட்டுரையாக வெளியிடப்பட உள்ளது.

புத்தகங்கள் வாசிப்பது, மனிதர்கள் அறிவுகளைப் பெற்று ஞானத்தை அதிகரித்து நல்லொழுக்கத்தைப் பண்படுத்துவதற்கான முக்கிய வழிமுறை. அதிகமான புத்தகங்களை படித்து வாசிப்பு பழக்கம் உடைய சமூகத்தைக் கட்டமைக்க வேண்டும். இதன் மூலம் பொது மக்களின் சிந்தனை நிலையை தொடர்ந்து உயர்த்தி அவர்களின் சிந்தனை ஆற்றலை வலுப்படுத்த வேண்டும். இதனால் சீனத் தேசத்தின் சிந்தனை உலகம் மேலும் ஆழமாகவும் விசாலமாகவும் இருக்கும் என்று இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author