அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான மோதலால் பாரம்பரிய கப்பல் பயண வழியின் பாதுகாப்பு பாதிப்படையும் அபாயங்கள் அதிகரிக்கும் நிலையில், இலங்கை, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளின் ஊடகங்கள், சீன முதலீட்டில் கட்டப்பட்ட துறைமுகங்கள், சீனா-ஐரோப்பா சரக்கு ரயில் ஆகியவை குறித்து சமீபத்தில் ஆக்கப்பூர்வமாக மதிப்பீடு செய்ததோடு, சீன அரசுத் தலைவர் முன்வைத்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவின் நெடுநோக்கு மதிப்பையும் நடைமுறை முக்கியத்துவத்தையும் மீண்டும் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன.
மத்திய கிழக்கு மோதலால் இலங்கையின் தெற்கு முனையில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் அலுவல்கள் தீவிரமாக அதிகரித்து வருகின்றன. இதனால் அதன் புதிய சுற்று விரிவாக்கப் பணி தொடங்கியுள்ளது என்று இலங்கையின் டேய்லி மிரர் நாளேடு செய்தி வெளியிட்டது. இத்துறைமுகம் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் கீழ் சீனா-இலங்கை இடையே முக்கியமான ஒத்துழைப்பு திட்டப்பணியாகும். 2026ஆம் ஆண்டு முதல் காலாண்டில் இத்துறைமுகத்தில் கையாளப்பட்ட சரக்குகள் அளவு 20.1 லட்சம் டன்னைத் தாண்டி, கடந்த ஆண்டின் இதேகாலத்தில் இருந்ததை விட 47 விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு, சீனாவின் நெடுநோக்கு பார்வையை, பல்வேறு நாடுகளிடையே ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் உறவை ஒன்றுக்கொன்று நன்மை தந்து கூட்டு வெற்றி பெறக் கூடிய ஒத்துழைப்பு உறவாக மாற்றுவதோடு, பிரதேச மற்றும் உலக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் இயக்காற்றலாக திகழ்கிறது என்று ஸ்பெயினின் சீன கொள்கை ஆய்வு இணையதளத்தில் வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
