பெங்களூரு அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் 7 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்!

Estimated read time 0 min read

கனமழை காரணமாக பெங்களூரு பௌரிங் அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பெங்களூருவில் அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் நிகழ்ந்த துயரம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் ரொக்கம், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author