சீன-ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர்களின் நெடுநோக்குப் பேச்சுவார்த்தை

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, 29ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங்குடன் 8ஆவது சீன-ஆஸ்திரேலிய தூதாண்மை மற்றும் நெடுநோக்குப் பேச்சுவார்த்தையை நடத்தினார்.

அப்போது வாங்யீ கூறுகையில், இரு தரப்பும் உயர் நிலைப் பரிமாற்றத்தை நிலைநிறுத்தி, மூலோபாய பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தி, மேலதிகமான துறைகள் சார்ந்த ஒத்துழைப்புகளை விரிவாக்கி, இரு தரப்புறவுக்கான ஆக்கப்பூர்வமான காரணிகளை அதிகரிக்க வேண்டும் என்றார்.

பென்னி வோங் கூறுகையில், ஒரே சீனா எனும் கொள்கையில் ஆஸ்திரேலியா ஊன்றி நின்று, தைவான் சுதந்திரத்தை எதிர்ப்பதாகக் கூறியதோடு, தைவான் பிரச்சினையை அமைதியான வழியில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், சீனாவுடன் இணைந்து சர்வதேச விதிகளைக் கூட்டாகப் பேணிக்காத்து, எரியாற்றல் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author