சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 14ஆம் நாள் காலை பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சீனா-செலாக்கின் நான்காவது அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க சீனாவுக்கு வந்த சிலி அரசுத் தலைவர் போரிக்கைச் சந்துத்துரையாடினார்.
அப்போது ஷிச்சின்பிங் குறிப்பிடுகையில், இவ்வாண்டு சீன-சிலி தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 55ஆவது ஆண்டு நிறைவாகும். புதிய யுகத்தில் இரு நாட்டுப் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவை இடைவிடாமல் செழுமைப்படுத்தி சீன-லத்தின் அமெரிக்க கூட்டு வளர்ச்சியின் முன்மாதிரியாகவும் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பின் முன்மாதிரியாகவும் உருவாக்கி மனிதகுலத்தின் அமைதி மற்றும் வளர்ச்சி லட்சியத்தைக் கூட்டாக முன்னேற்ற வேண்டும் என்றார்.
ஒரே சீனா என்ற கொள்கையைச் சிலி உறுதியாகப் பின்பற்றும் என்றும், வர்த்தகம், முதலீடு, செயற்கை நுண்ணறிவு முதலிய துறைகளில் சீனாவுடனான ஒத்துழைப்பை விரிவாக்கி இரு நாட்டுறவில் மேலதிக பயனுள்ள சாதனைகளைப் படைப்பதை முன்னேற்றும் என்றும் சிலி அரசுத் தலைவர் போரிக் தெரிவித்தார்.