ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

Estimated read time 1 min read

ஈரான் மீதான போர் நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அதிபர் டிரம்ப் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கடந்த பிப்ரவரி 28-ம் தேதி போர் தொடுத்தன. இதுகுறித்த அறிவிப்பை, அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி தெரிவித்திருந்தார்.

அமெரிக்க சட்டப்படி, போர் நடவடிக்கைக்கு, 60 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் அனுமதி கிடைக்காவிட்டால், அதன்பின் போர் நடவடிக்கையை அதிபர் திரும்பப்பெற வேண்டும். அதன்படி 60 நாள் கெடு முடிவடைந்த நிலையில், ஈரான் மீதான போர் நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துவிட்டதாக நாடாளுமன்றத்திற்கு அதிபர் டிரம்ப் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

You May Also Like

More From Author