மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலராக உயர்ந்துள்ளது.
இதன் எதிரொலியாக, இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, தனது உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானக் கட்டணங்களில் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை மார்ச் 14 முதல் அமல்படுத்தியுள்ளது.
மார்ச் 14 அதிகாலை 00:01 மணி முதல் செய்யப்படும் அனைத்து புதிய முன்பதிவுகளுக்கும் இந்த விலையேற்றம் பொருந்தும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இண்டிகோ விமானக் கட்டணம் உயர்வு: எரிபொருள் கூடுதல் கட்டணம் ரூ.2,300 வரை அதிகரிப்பு
