ஈரோடு : அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், த.வெ.க எந்த தொகுதியிலும் வெற்றி பெறாது என்று விமர்சித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் பேசுகையில்,“தமிழக வெற்றிக் கழகம் என்பது தியாகத்தால் உருவாக்கப்பட்ட இயக்கம். மனிதநேயத்தோடு இயங்கும் இயக்கம். தொலைநோக்கு சிந்தனையோடு மக்களுக்குப் பணியாற்றும் மனிதநேயமிக்க தலைவர் தளபதி விஜய். நாளை தமிழகத்தை ஆளப்போகிற தலைவர். நாளை சரித்திரம் சொல்லும்.
2026 தேர்தல் வெற்றி என்பது சரித்திரத்தில் இடம் பெறக்கூடிய வரலாறாக அமையும். இந்தியாவை வியக்க வைக்கும், தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழும் காலமாக இது அமையும்.அதற்காகத்தான் மனிதநேயத்தோடு இந்த இயக்கத்தை உருவாக்கியுள்ளார். தியாகத்தோடு இந்த இயக்கத்தை வழிநடத்திச் செல்கிறார்.
பல்வேறு சோதனைகளைத் தாண்டி, எத்தனை எதிர்ப்புகளை மீறி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் வீர நிலையில் நின்று கொண்டிருக்கிறார்.காலம் நான்காம் தேதி பதில் சொல்லும். இந்திய சரித்திர வரலாற்றில் முதலிடத்தைப் பெறக்கூடிய ஒரே தலைவராக தளபதி விஜய் விளங்குவார்.
நயினார் நாகேந்திரன் பொறுத்தவரையில் இது அவருக்கு இறுதித் தேர்தல். இதற்குப் பிறகு கட்சிப் பதவி இருக்குமா இல்லையா என்பதை மேலிடம் சொல்லும்.மக்களின் கருத்துக்கணிப்பு தெளிவாக உள்ளது.
உங்கள் வீட்டில் உங்களைக் கேட்காமல் உங்கள் குழந்தைகள் விசிலுக்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். இந்த மாற்றத்தை எதிர்பார்த்து, எதிர்கால தமிழகத்தை ஆளும் சிறந்த தலைவரைப் பெற்றுள்ளோம் என்ற எண்ணம் மக்களிடம் இருக்கிறது. அது நான்காம் தேதி பிரதிபலிக்கும். இந்தியாவின் சரித்திர வரலாற்றில் வெற்றி என்ற இலக்கை அவர் எட்டிப் பிடிப்பார்” என்றார்” எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
