ராமநாதசுவாமி கோவிலில் அரைகுறை ஆடையுடன் ரீல்ஸ்…

Estimated read time 1 min read

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்குள் பரதநாட்டியம் ஆடியவாறும், ஒய்யாரமாக நடந்து சென்றவாறும், சினிமா பாடலுக்கு ரீல்ஸ் எடுத்த இன்ஸ்டா பிரபலத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

இன்றைய டிஜிட்டல் காலத்தில் Facebook, Instagram, WhatsApp, YouTube போன்ற சமூக வலைதளங்கள் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு, வணிக வளர்ச்சி போன்ற பல துறைகளில் இவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அதே நேரத்தில் பல்வேறு எதிர்மறை விளைவுகளையும் உருவாக்கி வருகின்றன.

சமூக வலைதளங்களின் அதிகப்படியான பயன்பாடு இளைஞர்களில் மன அழுத்தம், தூக்கமின்மை, கவனம் சிதறல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, மற்றவர்களின் வாழ்க்கையை ஒப்பிட்டு பார்க்கும் பழக்கம் மனநல பாதிப்புகளை அதிகரிக்கிறது. மேலும், தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் வேகமாக பரவுவதால் சமூக அமைதிக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

அதேபோல், இணைய வழி மோசடிகள், தனியுரிமை மீறல்கள், சைபர் புகழ்ச்சி (cyberbullying) போன்ற பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன. இளம் வயதினர்கள் அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவதால் கல்வியில் கவனம் குறையும் நிலையும் உருவாகியுள்ளது. இது ஒரு புறம் இருக்க, இராமேஸ்வரம் இராமநாதசாமி திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த இன்ஸ்டா பிரபலம் பெண் ஒருவர் , இராமேஸ்வரம் வருகை தந்து கோவிலை சுற்றி உள்ள ரத வீதிகளில் நடனமாடியும், அதனைத் தொடர்ந்து கோவிலுக்குள் உள்ள அம்மன் சன்னதிக்கு செல்லக்கூடிய பிரகாரங்களில் பட்டுச்சேலை உடுத்தி பரதநாட்டியம் போன்று நடனமாடி அனைவரையும் தங்கள் பக்கம் கவரும் வகையில் நடனமாடி அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளமான தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்தது, தற்போது அனைத்து சமூக தளங்களிலும் வேகமாக இந்த வீடியோ பரவி வருகிறது, கோவிலில் ஆன்மீக நோக்கத்தோடு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மத்தியில் முகசுலிப்பு ஏற்படுத்தி உள்ளது.

கோவிலுக்குள் இது போன்ற நடனங்கள் ஆடுவதை காவல்துறையினரும் , கோவில் நிர்வாகமும் கண்காணித்து இதுபோன்று நடனம் ஆடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author