இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார் டிஜிபி சங்கர் ஜிவால்..!!

Estimated read time 1 min read

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி மற்றும் தமிழக போலீஸ் வீட்டுவசதி துறை டிஜிபி ஆகியோர் இன்றுடன் ஓய்வு பெறுகின்றனர்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி வருகிறார் சங்கர் ஜிவால். அதபோல் தமிழக போலீஸ் வீட்டு வசதி துறை டிஜிபியாக சைலேஷ்குமார் யாதவ் இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் இன்றுடன் (ஆக.29-வெள்ளிக்கிழமை) பணி ஓய்வு பெறுகின்றனர். எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று மாலை 4 மணியளவில் இருவருக்கும் வழியனுப்பு விழா நடைபெறவுள்ளது. அத்துடன் ஏற்கனவே ஓய்வுபெற்றுவிட்ட டெல்லி காவல் ஆணையரும், தமிழக காவல்துறையை சேர்ந்தவருமான சஞ்சய் அரோரா, காவல்துறை ஐ.ஜி.ஆசியம்மாள் மற்றும் இன்று ஓய்வுபெறும் டிஜிபிக்கள் ஆகிய நால்வருக்கும் ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் விரைவில் விருந்து நிகழ்ச்சிகளும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் அடுத்ததாக சட்டம் ஒழுங்கு டிஜிபியா யார் நியமிக்கப்படுவார்கள் என்கிற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

அதேநேரம் புதிய டிஜிபியாக தற்போது யாரும் நியமிக்கப்பட வாய்ப்பில்லை என்றும், மாறாக பொறுப்பு டிஜிபியாக நிர்வாக பிரிவு டிஜிபி வெங்கட்ராமனை அரசு நியமிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

You May Also Like

More From Author