டோக்கியோ விசாரணை துவங்கிய 80ஆவது ஆண்டு நிறைவு இவ்வாண்டு ஆகும். ஜப்பானின் போர் குற்றம் குறித்து தொலைவு கிழக்கு சர்வதேச ராணுவ நீதி மன்றம் டோக்கியோவில் நடத்திய மிக புகழ் பெற்ற விசாரணை, இதுவாகும். ஜப்பானின் ராணுவ வெறி மற்றும் ராணுவ வெறியினர்கள், ஆக்கிரமிப்பு போரை ஏற்படுத்திய குற்றங்கள் இதில் விசாரணை செய்யப்பட்டன. வரலாற்று உண்மைகளையும் சர்வதேச நீதியையும் மனித குலத்தின் கௌரவத்தையும் இந்த விசாரணை பேணிக்காத்தது.
டோக்கியோ விசாரணையை மறுக்கும் குரல் ஜப்பான் சமூகத்தில் இருந்து வருகின்றது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில் ராணுவ வெறி மேலோங்கி, டோக்கியோ விசாரணையின் முடிவு மற்றும் சர்வதேச ஒழுங்குக்கு அறைகூவல் விடுத்தது. இதன் மீது எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று ஜப்பானின் அறிஞர்கள் கருத்து தெரிவித்தனர்.
