37ஆவது ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாடு துவங்கியது. இதற்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 17ஆம் நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
இது குறித்து அவர் கூறுகையில், தற்போதைய உலகம் நூறு ஆண்டுகளில் கண்டிராத மாற்றம் எதிர்கொண்டுள்ளது. சீனா மற்றும் ஆப்பிரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் ‘உலகின் தெற்கு நாடுகள்’ சிறப்பாக வளர்ந்து வருகின்றன என்று தெரிவித்தார்.
ஆப்பிக்க ஒன்றியம் ஆப்பிரிக்க நாடுகளை ஒற்றுமைப்படுத்த செயல்பட்டு, ஒருமைப்பாட்டுப் போக்கு மற்றும் தாராள வர்த்தகக் கட்டுமானத்தை பெரிதும் முன்னேற்றி வருகின்றது.
ஆப்பிரிக்க ஒன்றியம் வெற்றிகரமாக 20 நாடுகள் குழுவில் சேர்ந்துள்ளதால், உலகளாவிய ஆட்சியில் பிரதிநிதித்துவத் தன்மை மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை ஆகிய துறைகளில் ஆப்பிரிக்கா மேலும் வலுவடைந்துள்ளது.
இவற்றுக்கு சீனத் தரப்பு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது என்று அவர் கூறினார்.