மக்கள் முதன்மை என்ற வளர்ச்சிக் கண்ணோட்டத்தைப் பின்பற்றி வரும் ஃபூச்சோ நகரம்

மக்கள் முதன்மை என்ற வளர்ச்சிக் கண்ணோட்டத்தைப் பின்பற்றி வரும் ஃபூச்சோ நகரம்

1992ம் ஆண்டில் ஃபூச்சோ மாநகராட்சிக் கட்சிக் கமிட்டியின் செயலாளரான ஷச்சின்பிங், வரும் 20 ஆண்டுக்காலத்தில் ஃபூச்சோவின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி நெடுநோக்கு திட்டத்தை வகுத்தார். இத்திட்டம், “3820 நெடுநோக்கு திட்டப்பணி”என்பதாகும்.

இதில் மாநகரத்தின் கட்டுமானம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பண்பாடு, கல்வி உள்ளிட்டவை குறித்து உருவாக்கப்பட்ட சிறப்பு திட்ட வரைவுகளில் “மக்கள் முதன்மை” என்னும் வளர்ச்சி கண்ணோட்டம் எப்போதும் பின்பற்றப்பட்டு வருகிறது.


கடந்த 30 ஆண்டுகளில், “மக்கள் முதன்மை” சிந்தனையின் வழிகாட்டலில், ஃபூச்சோ மக்களுக்கு கிடைத்துள்ள நன்மை, மகிழ்ச்சி மற்றும் பாதுகாப்பு உணர்வு வலுவடைந்து வருகிறது.
“3820” நெடுநோக்கு திட்டப்பணியின் முன்னுரையில், ஒரு நகரம் வளம் மற்றும் வளர்ச்சி அடைந்தால், முடிவெடுப்பவர்களும் மக்களும் நீண்டகால இலக்குளை நிறைவேற்றுவதற்கான மனவுறுதியுடன் முயற்சி செய்ய வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

30 ஆண்டுகளைக் கடந்து சென்ற இப்படத்தொகுப்பு மூலம், ஃபூச்சோ மாநகரின் வளர்ச்சிப் போக்கு, உள்ளூர் அரசு அலுவலர்கள் மற்றும் மக்களின் விடா முயற்சி ஆகியவை காட்டப்பட்டுள்ளன.

You May Also Like

More From Author