சீனத் தேசிய எரியாற்றல் நிர்வாகத்தின் தலைவர் வாங் ஹொங்ஸி ஆகஸ்டு 26ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், 14வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில், கார்பன் குறைந்த பசுமையான வளர்ச்சி முறை மாற்றம் மிக உயர்வேக வளர்ச்சியடைந்த காலமாகும். உலகளாவிய மிகப் பெரிய புதுப்பிக்கவல்ல எரியாற்றல் அமைப்புமுறையை சீனா உருவாக்கியது. நாடளவில் புதுப்பிக்கவல்ல எரியாற்றல் மின்சார உற்பத்தித் திறன் வகிக்கும் விகிதம் 40 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்றார்.
அவர் மேலும் கூறுகையில், புதிய எரியாற்றல் துறையில் சீன அறிவுசார் காப்புரிமைகளின் எண்ணிக்கை உலகளவில் 40 விழுக்காட்டுக்கு மேல் உள்ளது. ஒளிவோல்ட்டா மாற்ற செயல் திறன், கடலில் காற்றுச் சுழலியின் உற்பத்தித் திறன் முதலியவை, புதிய சாதனைகளைப் பெற்று வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளான வளர்ச்சியுடன், சீனாவில் புதிய எரியாற்றல் சேமிப்பு அளவு உலக அளவில் முதலிடம் வகித்துள்ளது என்றும் தெரிவித்தார்.