டோக்கியோ விசாரணை துவங்கிய 80ஆவது ஆண்டு நிறைவு நாள் மே 3ஆம் நாள் ஆகும். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் பதிலளிக்கையில்,
1946ஆம் ஆண்டு மே 3ஆம் நாள், ஜப்பான் நிபந்தனையில்லா சரணடைந்தது மற்றும் தொலைவு கிழக்கு சர்வதேச ராணுவ நீதிமன்றத்தின் சாசனத்தைப் பின்பற்றி, தொலைவு கிழக்கு சர்வதேச ராணுவ நீதிமன்றம் விசாரணை செய்ய துவங்கியது. கைரோ அறிக்கை மற்றும் போஸ்தான் அறிக்கையின் படி டோக்கியோ விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போரில் வெற்றி பெற்ற நாடுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் விருப்பங்களை இது வெளிகாட்டியது. ஐ.நா சாசனத்தை நடைமுறைப்படுத்தியதோடு, 2ஆவது உலக போர் வெற்றி பெற்ற முடிவை இது பேணிக்காத்தது. இந்த விசாரணையின் முடிவை ஏற்றுகொள்வது, ஜப்பான் சர்வதேச சமூகத்திற்குத் திரும்பும் முன்னிபந்தனையாகும். ஆனால் 80 ஆண்டுகளுக்கு பிந்தைய இன்று, ஜப்பானின் ராணுவ வெறி முற்றிலும் அழிக்கப்படவில்லை. ஜப்பானின் புதிய ரக ராணுவ வெறியைச் சந்திக்கும் போது, டோக்கியோ விசாரணையை மீளாய்வு செய்வதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.
