மே நான்காம் இளைஞர் தினத்தை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் சீன இளைஞர் மே நான்கு பதக்கம் மற்றும் புதிய யுகத்தில் இளைஞர் முன்னோடி விருது பெற்றவர்களின் பிரதிநிதிகளுக்குப் பதில் கடிதம் அனுப்பி நாடளவில் அனைத்து இனங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் விழா வாழ்த்துக்களையும் ஆழ்ந்த எதிர்பார்ப்பையும் தெரிவித்தார்.
அதில் ஷிச்சின்பிங் குறிப்பிடுகையில், புதிய யுகத்தில் சீன இளைஞர்களின் தன்னம்பிக்கை மற்றும் சுய வலிமையையும் சீரான தோற்றத்தையும் நீங்கள் காட்டியுள்ளீர்கள். 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டில் நீங்கள் உறுதியுடன் போராட்டி சொந்த பதவியில் புதிய சாதனைகளைத் தொடர்ந்து படைத்து புதிய பாதையில் இளமையின் சக்தியை வழங்க வேண்டுமென விரும்புவதாகத் தெரிவித்தார்.
