ஏப்ரல் 27ஆம் நாள் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 6பேர் சீன காவற்துறையினரின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் டிய்சியேன் பாறைகளை சட்டவிரோதமாக ஊடுருவினர்.
சீனக் கடலோர காவற்படையினர் பாறைகளை ஊடுருவிய அவர்களின் சட்டவிரோதமான செயல்பாடுகளைச் சட்டத்தின்படி சமாளித்தனர்.
டிய்சியேன் பாறைகள் உள்ளிட்ட நன்ஷா தீவுகள் மற்றும் அதற்கு அருகிலுள்ள கடற்பரப்பு மீது விவாதத்துக்குத் தேவையற்ற இறையாண்மையைச் சீனா கொண்டுள்ளது.
சீனாவின் இறையாண்மையைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை பிலிப்பைன்ஸ் தரப்பு உடனடியாக நிறுத்த வேண்டும். சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கடற்பரப்பில் இறையாண்மை பேணிகாப்பு மற்றும் சட்ட அமலாக்க செயல்பாடுகளைச் சீனக் கடலோர காவற்படை சட்டத்தின்படி தொடர்ந்து நடத்தும் என்று சீனக் கடலோர காவல் படையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.