அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதாக அறிவித்துள்ள அதே வேளையில், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க கடற்படையின் கடுமையான முற்றுகை தொடரும் என எச்சரித்துள்ளார்.
இந்த முற்றுகை காரணமாக ஈரானுக்கு நாளொன்றுக்கு சுமார் 500 மில்லியன் டாலர்(சுமார் ₹4,100 கோடி) வருவாய் இழப்பு ஏற்படுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி தற்போது அமெரிக்காவின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது.
இது குறித்து ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க விரும்புகிறது, ஏனென்றால் அது மூடப்பட்டிருப்பதால் அவர்கள் ஒரு நாளைக்கு 500 மில்லியன் டாலர்களை இழக்கிறார்கள். நான் முற்றுகையிட்டுள்ளதால் தங்களின் முகத்தையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர்கள் அதை மூட விரும்புவதாகக் கூறுகிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
ஈரானுக்கு தினமும் Rs.4100 கோடி இழப்பு: அதிரடி காட்டும் டிரம்ப்
