தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் அதாவது ஜூன் 15ஆம் தேதி காலை 5 மணி முதல் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதற்கு சாஃப்ட்வேர் பிரச்சனையே முக்கிய காரணம் என்று கூறப்படுகின்றது. ஏற்கனவே ஆறு மாதங்களுக்கு முன்பே இதே போல பல நாட்கள் ஒளிபரப்பில் தடை ஏற்பட்ட நிலையில் அப்போது பல வாடிக்கையாளர்கள் தனியார் நிறுவனங்களின் DTH க்கு மாறிவிட்டனர். தற்போது மீண்டும் அதே போல ஒரு பிரச்சனை வந்துள்ளது வாடிக்கையாளர்களை சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது.