வங்காளதேச வெளியுறவு அமைச்சரின் சீன பயணம்

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீயின் அழைப்பை ஏற்று, வங்காளதேச வெளியுறவு அமைச்சர் கலீலூர் மே 5 முதல் 7ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,

சீனா மற்றும் வங்காளதேசம், பாரம்பரிய நட்பு கொண்ட அண்டை நாடுகளாகவும் பன்முக நெடுநோக்கு கூட்டாளியாகவும் திகழ்கின்றன. தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 50 ஆண்டுகளில், இரு நாடுகள், பஞ்ச சீல கோட்பாடுகள் அடிப்படையில் நட்புறவை வளர்த்து, ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளித்து, சம நிலையில் தொடர்பு கொண்டு, இரு தரப்புறவு நிதானமாக வளர்ந்து வருகின்றது.

இது இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயத்துள்ளது. சீன-வங்காளதேச உறவில் சீனா உயர்வாக கவனம் செலுத்தி, இந்த பயணத்தை அடிப்படையாக கொண்டு, வங்காளதேசத்தின் புதிய அரசுடன் இணைந்து, அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தி, பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவைக் கூட்டாக கட்டியமைத்து, சீன-வங்காளதேச பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவின் வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புகின்றது என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author