தீப ஒளி திருநாளில் இந்த மந்திரத்தை 21 முறை சொல்லி வழிபடுவது சிறப்பு..!

Estimated read time 0 min read

மகாலட்சுமி திருமாலை திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். அப்போது, “மூத்தவளான என் திருமணத்திற்குப் பிறகுதான் மகாலட்சுமியின் திருமணம் நடைபெற வேண்டும்.” என்று மூதேவி கூறினாள். அவளைத் திருமணம் செய்துகொள்வதற்கு அனைவரும் தயங்கினார்கள். அப்போது உத்தாலகர் என்ற முனிவர் முன்வந்து மூதேவியைத் திருமணம் செய்து கொள்வதற்கு ஒப்புக்கொண்டார். அவர் ”என் தவவலிமையால் தீயவைகள் அனைத்தையும் விலக்கிவிடுவேன்.” என்றார். வேதங்கள் முழங்க முறைப்படு மகாவிஷ்ணுவே உத்தாலகருக்கே மூதேவியைக் கன்னிகாதானம் செய்து கொடுத்தார். பின்பு மகாலட்சுமியின் திருமணம் நடைபெற்றது. மகாலட்சுமியின் திருமண நாளே தீபாவளியாகும். எனவே மகாலட்சுமியை கீழ்க்காணும் மந்திரத்தை 21 முறை சொல்லி வழிபடுவதும் சிறப்பு.

கமலவாஸின்யை நாராயண்யை நமோ நம

கிருஷ்ணப்ரியாயை ஸத்தம் மஹாலக்ஷ்ம்யை நமோ நம

பத்மபத்ரேக்ஷணாயை பத்மாஸ்யாயை நமோ நம

பத்மாஸனாயை பத்மின்யை வைஷ்ணவ்யை நமோ நம

Please follow and like us:

You May Also Like

More From Author