இந்தியாவில் 4,168 கோடி ஸ்பேம் கால்கள்: டிஎன்டி இருந்தும் தப்பிக்கும் மோசடிக்காரர்கள்  

Estimated read time 1 min read

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய தொல்லைகளில் ஒன்றாக ஸ்பேம் கால்கள் உருவெடுத்துள்ளன.
‘ட்ரூகாலர்’ (Truecaller) நிறுவனம் வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டிற்கான அறிக்கையின்படி, இந்திய பயனர்கள் அந்த ஆண்டில் மட்டும் 4,168 கோடி ஸ்பேம் கால்களைப் பெற்றுள்ளனர்.
உலகிலேயே ஸ்பேம் கால்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தைப் பிடித்துள்ளது.
குறிப்பாக, ட்ரூகாலர் பயனர்களுக்கு வரும் அறிமுகமில்லாத அழைப்புகளில் 66 சதவீதம் ஸ்பேம் அழைப்புகளாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அரசின் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் டிஎன்டி (DND) சேவைகள் இருந்தும், இந்த ஸ்பேம் அழைப்புகள் ஏன் குறையவில்லை என்பது தற்போது ஒரு மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
இந்த ஸ்பேம் அச்சுறுத்தல் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த புதிய விவாதங்களைத் தொடங்கியுள்ளது.

You May Also Like

More From Author