சென்செக்ஸ் 650 புள்ளிகள் உயர்வு! நிஃப்டி 22,900ஐத் தாண்டியது! காரணம் இதுதான்  

Estimated read time 0 min read

இன்று காலையில் 500 புள்ளிகளுக்கும் மேலாகச் சரிந்து முதலீட்டாளர்களைக் கவலையில் ஆழ்த்திய இந்தியப் பங்குச் சந்தை, மதியத்திற்கு மேல் அசுர வேகத்தில் மீண்டெழுந்தது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் சுமார் 662 புள்ளிகள் உயர்ந்து 73,982 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 208 புள்ளிகள் உயர்ந்து 22,921 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
காலையில் நிலவிய அச்சம் நீங்கி, சந்தையில் சுமார் 2,846 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தைச் சந்தித்தன.
நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களின் பங்குகளும் 1 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து சந்தைக்கு வலுசேர்த்தன.

You May Also Like

More From Author