மே 7ஆம் நாள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ பெய்ஜிங்கில் சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள டைன்ஸ் தலைமையிலான அமெரிக்க செனெட் அவையின் பிரதிநிதிக் குழுவைச் சந்தித்துரையாடினார்.
அப்போது வாங்யீ கூறுகையில், அரசுத் தலைவர் டிரம்ப் பதவியேற்ற பின், சீனாவில் பயணம் மேற்கொண்ட முதலாவது 2 கட்சிகளைச் சேர்ந்த அமெரிக்க செனெட் அவை உறுப்பினர்களின் பிரதிநிதிக் குழு இதுவாகும். இதற்குப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அமெரிக்கா மீதான சீனாவின் கொள்கை எப்போதும் நிலையானது. அதாவது, இரு நாடுகள், ஒன்றுக்கொன்று மதிப்பளிக்கும் அடிப்படையில், பஞ்ச சீல கோட்பாட்டைப் பின்பற்றி, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றியை இலக்காகக் கொண்டு உலகத்தின் அமைதி மற்றும் நிதானத்துக்கு பங்காற்ற வேண்டும். சீனாவை அமெரிக்கா புறநிலையாக அணுக வேண்டும். சீனாவின் மைய உரிமைகளை உண்மையாகவே மதிக்க வேண்டும். உலகத்துக்கு மேலதிக ஆக்கப்பூர்வமான சமிக்கையை வழங்க வேண்டுமென விரும்புவதாக வாங்யீ தெரிவித்தார்.
