சீனாவில் மே தின விடுமுறையில், 151.7 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது வரலாற்றில் புதிய பதிவை எட்டியுள்ளது. முழு நாட்டின் நுகர்வுடன் தொடர்புடைய துறைகளில் விற்பனை வருமானம் கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 14.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதில் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு சேவை வருமானம், கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 21.2 விழுக்காடு அதிகரித்துள்ளது.
சீனாவின் மே தின விடுமுறைக் காலத்தில் பயண அளவு மற்றும் பொருளாதார செல்வாக்கு உலகில் முன்னணியில் உள்ளது. இது உலக சுற்றுலாச் சந்தை மீட்சியடைவதை எடுத்துக் காட்டுகிறது என்று அமெரிக்காவின் Travel + Leisur எனும் இதழ் தெரிவிக்கிறது.
சீன ரென்மின் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறைப் பேராசிரியார் வாங்சியாவ்சோங் கூறுகையில், இவ்வாண்டின் முதல் காலாண்டில், சீன பொருளாதார நிலை சிறப்பாக உள்ளது. மக்களின் நுகர்வு நம்பிக்கை உறுதியாக உள்ளது. இது பயணப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு ஆதரவளித்துள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், 50 நாடுகளுக்கு சீனா விசா விலக்கு அளித்துள்ளது. திறப்பான, சகிப்பான, நட்பார்ந்த, சேவை சிறப்பான சீனா, உலக பயணிகளின் விருப்பமான இலக்கு இடங்களில் ஒன்றாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
