சரியான ஆளுகை செயல்திறன் பற்றிய கருத்து உலக நிர்வாகத்துக்குப் பங்கு

கியூபா அறிஞரான எடுவார்டோ அண்மையில் ஸ்பெனிஷ் சீனக் கொள்கை குறித்த பார்வை என்ற இணையத்தளத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். அதில், நல்ல ஆளுகைச் செயல்திறன் என்ன என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டு, நடைமுறைப்படுத்துவதன் நோக்கம், நாட்டின் ஆட்சி முறை, மக்களின் அடிப்படை நலன்கள் மற்றும் அறிவியல் விதிகளுக்குப் பொருந்தி, தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்குவதாகும். இந்தக் கருத்து, சீனாவின் உள்நாட்டில் நடைமுறைக்கு வரக் கூடியது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அது, உலக நிர்வாகத்துக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டது.

தூதாண்மைக் கொள்கை துறையில், ஆளுகை செயல்திறன் பற்றிய சரியான கருத்து, சீனாவின் சர்வதேச ஒத்துழைப்பின் நடைமுறைகள் முழுவதிலும் பின்பற்றப்படுகிறது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டப்பணி, தெற்குத் தெற்கு ஒத்துழைப்பு போக்கு ஆகியவற்றிலும் இந்த கருத்து ஒருங்கிணைந்துள்ளது. லத்தின் அமெரிக்க நாடுகள், சீனாவுடன் சமமான பேச்சுவார்த்தை மூலம், ஆளுகை செயல்திறன் பற்றிய சரியான கருத்தை, சொந்த நாட்டின் நிலைமைக்கிணங்க செயல்படுத்துவதை முன்னெடுத்து, மேலும் நியாயமான சர்வதேச ஒழுங்கைக் கூட்டாக உருவாக்க வேண்டும் என்றும் இக்கட்டுரையில் அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author