சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 25ஆம் நாள் பிற்பகல் மக்கள் மா மண்டபத்தில் சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள டொமினிக்கத் தலைமையமைச்சர் ஸ்கர்ரிட்வுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில் டொமினிக்கா, கரீபியன் பிரதேசத்தில் உள்ள முக்கிய நாடாகும். இது, இப்பிரதேசத்தில் சீனாவின் நம்பகத்தக்க நல்ல நண்பர் மற்றும் நல்ல கூட்டாளியாகும்.
சீன-டொமினிக்கா உறவு, தெற்கு தெற்கு ஒத்துழைப்புக்கு மாதிரியாக மாறியுள்ளது. சீனாவின் உதவியுடன் கட்டியமைக்கப்பட்ட மருத்துவ மனை, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு திடல் உள்ளிட்ட திட்டப்பணிகள் இரு நாடுகளின் நட்பார்ந்த ஒத்துழைப்பை வெளிப்படுத்தியுள்ளன.
டொமினிக்காவுடன் இணைந்து, இரு நாட்டுறவு மேலதிக சாதனைகளைப் பெற்று, இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயப்பதை முன்னேற்ற சீனா விரும்புவதாக தெரிவித்தார்.