ஆர்.ஜே. பாலாஜி- சூர்யாவின் ‘கருப்பு’ பட டிரெய்லர் வெளியீடு திடீர் தள்ளிவைப்பு; பின்னணி என்ன?  

Estimated read time 1 min read

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தற்போதைய அரசியல் சூழலே இந்தத் தாமதத்திற்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் பரபரப்பான சூழலில், திரைப்பட டிரெய்லரை வெளியிட்டால் அது மக்களிடையே உரிய கவனத்தைப் பெறாமல் போய்விடும் என ஆர்.ஜே. பாலாஜி கருதுகிறார்.
“டிரெய்லர் தயாராக உள்ளது. ஆனால் தற்போதைய அரசியல் சூழ்நிலையால் அதன் முக்கியத்துவம் குறைந்துவிடக்கூடாது என நினைக்கிறோம். விரைவில் ஒரு தெளிவு கிடைக்கும் என நம்புகிறேன்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

More From Author